பால் காளானில் ஏற்றம்
பால் காளானில் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என, உத்திரமேரூர் அடுத்த, காரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பட்டதாரி இளைஞர், ஜெ.லோகேஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:சிறிய கொட்டகையில், பல வித காளான்களை வளர்க்கலாம். 100 பைகளில் காளான் விதை விதைத்தால், 45 நாட்களுக்கு பின், 50 கிலோ பால் காளான் அறுவடை செய்யலாம். அதற்கான சீதோஷ்ண நிலையை பராமரிக்க வேண்டும்.கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்தால், மாதம், 10 ஆயிரம் வரை, வருவாய் ஈட்டலாம். இடத்திற்கேற்ப வளர்த்தால், அதிக வருவாய் பார்க்கலாம். இதை, அனைத்து பருவ காலங்களிலும் வளர்க்க முடியும் என்பதால், கூடுதல் வருவாய் ஈட்டலாம். காளான் விதையை, நாங்களும் விற்பனை செய்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 89739 67345