உள்ளூர் செய்திகள்

காளை மாட்டிலும் பணம் கறக்கலாம்

காளை மாட்டில் உள்ள வருவாய் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை உதவி பேராசிரியர், சபாபதி கூறியதாவது:மாடு வளர்ப்பில், கறவை மாடுகள் மூலமாக, அதிக வருவாய் ஈட்ட முடியும் என, பலர் நம்புகின்றனர். காளை மாடுகள் வளர்ப்பில், குறைந்த வருவாய் கிடைக்கும். சில நேரங்களில் வருவாய் கிடைக்காது என, பலரும் நினைக்கின்றனர்.அதை தவிர்க்க, தரமான காளை மாடு வளர்த்து, செயற்கை கருவூட்டலுக்கு, விந்தணு உறை குச்சிகளை தயாரிக்கலாம்.இதற்கு, காளை மாடுகளின் விந்தணுக்களை பதப்படுத்த தெரிந்த ஒரு கால்நடை மருத்துவரை நியமித்தால், ஒரு வாரத்திற்கு, ஒரு காளை மாடு மூலமாக, 6,000 ரூபாய் முதல், 1.2 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94424 85691காய்கறி நாற்றுகள்காஞ்சிபுரம் மாவட்டத்தில், போதிய காய்கறி விதைகள் இருப்பு இல்லை.அதற்கு பதிலாக, கீழ்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம், களக்காட்டூர், பிச்சிவாக்கம், ஆத்துார் ஆகிய ஐந்து தோட்டக்கலை பண்ணைகளில், பல தரப்பட்ட நாற்றுகள் உள்ளன. இதை பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலகத்தை நாடலாம்.பி.இம்மானுவேல்தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர், காஞ்சிபுரம்தொடர்புக்கு: 044- - 2722 2545


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !