காளான் விதை தயாரிப்பு 17ல் ஒரு நாள் பயிற்சி
திருவள்ளூர் அடுத்த திரூரில் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், டிச.,17ல் காளான் விதை தயாரிப்பு குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இக்கட்டணப் பயிற்சி முகாமில், படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணம் 590 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். தொடர்புக்கு:செ.சுதாஷா, 97910 15355 .