உள்ளூர் செய்திகள்

இரு வித வருவாய்க்கு இளஞ்சிவப்பு காராமணி

இளஞ்சிவப்பு நிற காராமணி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.அந்த வரிசையில், 90 நாளில் மகசூலுக்கு வரும் இளஞ்சிவப்பு நிற காராமணி சாகுபடி செய்துள்ளேன். இது, 4 அடி உயரம் வரையில், கொடி போல படரும் தன்மையுடையது. நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை.நீர் மற்றும் பராமரிப்பு நிர்வாகத்தை முறையாக கையாண்டால், இளஞ்சிவப்பு நிற காராமணியில் அதிக மகசூல் எடுக்க முடியும்.இந்த இளஞ்சிவப்பு நிற கொடி காராமணியை, பொரியலுக்கு பயன்படுத்தலாம். முதிர்ந்துவிட்டால், பருப்பு வகையாகவும் உபயோகப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- பி. குகன்,94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !