உள்ளூர் செய்திகள்

இலைகளின் மூலம் செடி உற்பத்தி

பொதுவாக செடிகள் விதைகள், கட்டிங்குகள், ஒட்டுக்கட்டுதல் மற்றும் திசுவளர்ப்பு ஆகிய முறைகளிலேயே உருவாக்கப்படுகிறது. இதில் 'திசு வளர்ப்பு' முறை மிகவும் அதிக பொருட்செலவை உள்ளடக்கியது. ஆனால் தரத்தில் உயர்ந்த தொழில் நுட்பத்தைக் கொண்டது.எங்களின் இந்தத் தொழில்நுட்பம் தரத்தில் திசுவளர்ப்பு முறைக்கு இணையானது. ஆனால் இதற்கு அதிக பொருட்செலவு தேவையில்லை. ஒரு செடியில் உள்ள இலைகளைக் கொண்டே அதன் செடிகளை ஜெராக்ஸ் போல உற்பத்தி செய்யலாம். தரமான தாய் செடிகளில் இருந்து இலைகள் மூலம் செடிகளை உற்பத்தி செய்யும்போது அதன் தரம் உறுதி செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மிகவும் தரமான, விளைச்சல் உறுதி செய்யப்பட்ட நாற்றுக்கள் கிடைக்கும். தற்போது சத்தியமங்கலம் பகுதியில் அதிகமாக பயிரிடப்படும் குண்டுமல்லியும், திருச்சி பகுதியில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் இட்லிப்பூ நாற்றுக்களும் இலைகளைக் கொண்டு செடிகளை உற்பத்தி செய்யும் இந்த முறையில் சாத்தியமாகி இருக்கிறது. மற்ற செடிவகைகளை இந்த முறையில் உற்பத்தி செய்யும் எங்களின் முயற்சி தொடரும்.1998ல் இருந்து எங்கள் நர்சரி, நாற்று உற்பத்தித் தொழிலில் உள்ளது. தரமான, விளைச்சல் உறுதி செய்யப் பட்ட நாற்றுக்களை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ஏனெனில் நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். விவசாயமே எங்கள் பரம்பரைத் தொழில். 2011ம் ஆண்டில், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் எனக்கு 'சிறந்த விவசாயி' விருதை வழங்கியது. டிஎன்ஏயுவின் அக்ரி பிசினஸ் இன்குபேட்டரில் எங்கள் நர்சரி நிறுவனம் உறுப்பினராகவும் பதிவுபெற்றது.-எஸ்.ராஜரத்தினம், பி.எப்.டெக் (அக்ரி),மேட்டுப்பாளையம்-641 301.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !