வான்கோழி குஞ்சுகளுக்கு புரத தீவனங்கள்
வான்கோழி குஞ்சுகளுக்கு, புரத தீவனம் வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது: விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இதில், கோழி இனங்களில், வான் கோழி வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்டலாம். இரண்டு வார வான்கோழி குஞ்சுகள், தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் அதிகமாக இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில் வான்கோழி குஞ்சுகளுக்கு ஏற்ப சீதோஷ்ண நிலை கிடைக்காமல் இறக்கவும் செய்கின்றன. இதை தவிர்க்க, தினசரி பால், அவித்த முட்டைகள், பச்சை கீரைகள் மற்றும் லைசின், மித்தியோனின், அமினோ அமிலங்கள் அடங்கிய புரத தீவனங்களை வழங்கலாம். இதன் மூலமாக, வான் கோழி குஞ்சுகள் தீவனம் இன்றி பட்டினியாக கிடந்து உயிரிழப்பை தவிர்க்கலாம். வான் கோழி வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594