கோழி பண்ணைகளில் எலிகளை கட்டுப்படுத்தலாம்
கோழி பண்ணைகளில், எலிகள் கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இதில், நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி பண்ணைகளில், எலிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன.குறிப்பாக, சுண்டெலி, கூரை எலி, பெருச்சாளி ஆகிய எலிகளின் தொல்லையால், நாட்டுக்கோழி குஞ்சு மற்றும் பிராய்லர் கோழி குஞ்சு பாதிக்கப்படும்.ஒரு எலி, 25 கிராம் தீவனத்தை உட்கொள்ளும். ஒரு பண்ணையில், 20க்கும் மேற்பட்ட எலிகள் இருந்தால், கிலோ கணக்கில் தீவனம் வீணாகும். இது தவிர, கோழிப்பண்ணைகளின் கூரை மற்றும் கட்டடங்கள் துளை போட்டு விடும். இந்த ஓட்டைகளின் வழியாக விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால், கோழி வளர்ப்பில் இழப்பீடு ஏற்படும்.இதை தவிர்க்க, கோழி பண்ணை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பண்ணை அருகே, எலிப்பொறிகள் அமைக்கலாம். தீவன மூட்டைகள் அடுக்கும் போது, கொட்டகையில் சேதம் ஏற்படாத இடத்தில் தீவன மூட்டைகள் அடுக்க வேண்டும்.மேலும், எலிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை கலக்கி, பாதை வழியாக தெளிக்கலாம். இதன் வாயிலாக, கோழி பண்ணைகளில், இழப்பீடு இன்றி வருவாய் வகுக்க வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் கே.பிரேமவல்லி,97907 53594.