உள்ளூர் செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

களை எடுக்க புதிய கருவிகள்: மாக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள 3 வகையான கருவிகள்* ரோட்டோமாக்ஸ் வீடர் (டீசல்) - 6 எச்பி சக்தி கொண்ட இக்கருவியைக் கொண்டு தோப்புகளில் களை எடுக்கலாம். தென்னை, மாந்தோப்பு, தேக்கு, நெல்லி போன்ற தோப்புகளில் உள்ள களைகளைக் கட்டுப் படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 30-40 சென்ட் வரை களை எடுக்கலாம். ஏக்கருக்கு 2 லிட்டர் டீசல் மட்டும் போதுமானது. நிலத்தில் 30 சதவீதம் ஈரம் அவசியம்.* ரோட்ரிடில்லர் (பெட்ரோல்) - 6.5 எச்.பி. சக்தி கொண்ட இந்தக்கருவி இரண்டரை அடி இடைவெளியில் நடவு செய்யப்படும். அனைத்து பயிர்களிலும் களை எடுக்கலாம். கரும்பு, வாழை, சவுக்கு, மல்லி போன்ற பயிர்களில் களை எடுக்க இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். நிலத்தில் 30 சதவீதம் ஈரப்பதம் அவசியம்.* பவர் வீடர் (பெட்ரோல்) - 2 எச்.பி. சக்தி கொண்ட இந்தக்கருவி மிகக்குறைந்த இடைவெளியில் பயிரிடப்படும் பயிர்களில் நெற்பயிர், சூரியகாந்தி, வேர்க்கடலை, மஞ்சள் போன்ற பயிர்களில் களை எடுக்க பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திற்கு 10-15 சென்ட் வரை களை எடுக்கலாம். நிலத்தில் 30 சதவீதம் ஈரப்பதம் அவசியம்.மேலும் விபரங்களுக்கு ''மாக்ஸ் இன்ஜினியரிங் அலுவலகம் - 24, வண்டிக்காரன் தெரு, மடுவங்கரை, கிண்டி, சென்னை-600 032. போன்: 044-3250 0041, 98841 00041. மதுரை-98430 53744, 99446 28899; திண்டுக்கல்-99944 25620, 94882 53113; கோயம்புத்தூர்-91766 99061; சேலம்-98430 78259; கிருஷ்ணகிரி-96558 00600; ஈரோடு, திருப்பூர், கரூர்-98652 54302.வேளாண் பல்கலைக் கழகத்தின் தயாரிப்புகள்இயற்கை இடுபொருட்கள்: பயிர் சூழலியல் துறையில் மண்புழு உரம், பஞ்சகவ்யா தயாரிப்பு முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான மண்புழு உரம், பஞ்சகவ்யா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. மட்கக்கூடிய கழிவுகளை விரைவாக மட்கவைத்து 'நுண்ணுயிர் கூட்டுக்கலவை' தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ வீதம் கலந்து குவியலாக வைத்தால் விரைவில் மட்கிவிடும்.* கரும்புக்கு குளூக்கனோ அசிடோபேக்டர்: கரும்பில் இலை, தண்டு மற்றும் வேர் பகுதிகளில் இருக்கும் குளூக்கனோ அசிடோ பேக்டர். இதை கருப்பு யூரியா என்றும் அழைக்கிறார்கள். தழைச்சத்தை நிறுத்துவதோடு பயிர் வளர்ச்சிக்கு தேவையான துத்தநாகம், மணிச்சத்து, இரும்புச்சத்து போன்றவற்றின் தாது உப்புக்களை கரைத்துக் கொடுக்கும் வேலையையும் செய்கின்றன. மகசூல் 4 சதம் முதல் 17 சதம் வரை கூடுகிறது. இந்த உயிர் உரத்திற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உயிர் உரம்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. 50 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ குளூக்கனோ அசிடோபேக்டரை கரைத்து ஒரு எக்டருக்கு தேவையான கரும்பு கரணைகளை முக்கி எடுத்து நடவு செய்ய வேண்டும். 30, 60, 90ம் நாட்களில் 25 கிலோ தொழு உரத்துடன் 2 கிலோ குளூக்கனோ அசிடோ பேக்டரை கலந்து மண்ணில் தூவி இடவேண்டும்.*நூற்புழுக்களுக்கு மெட்டாரைசியம் - சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை அசுவினி, மாவுப்பூச்சிகள், தத்துப்பூச்சிகள் போன்றவற்றின் தாக்குதலைக் கட்டுப் படுத்த ஒரு எக்டருக்கு இரண்டரை கிலோ 'பவேரியா பேசியானாவை' 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வேர் நூற்புழுக்கள், வேர் சாம்பல் வண்டுகள், வேர் உண்ணும் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப் படுத்த ஒரு எக்டருக்கு இரண்டரை கிலோ மெட்டாரைசியம் அனிசோபிலியேவை வேர்பகுதியில் படுவதுபோன்று தூவிவிட வேண்டும்.தவிர மாவுப்பூச்சியைக் குறைக்கும் ஒட்டுண்ணிகள் திராட்சைக்கு ஆஸ்திரேலிய வண்டுகள், பயிர் வளர்ச்சியைத் தூண்ட அசோபால்மெட், தழைச்சத்துக்கு அசோலா, பயறு வகைகளுக்கு டிரைகோடெர்மா விரிடி, பழ அழுகல் நோய்க்கு சூடோமோனஸ் போன்றவற்றை பெற தொடர்பு முகவரி: பூச்சியியல் துறை, போன்: 0422-661 1214; பயிர் நோயியல் துறை, 0422-661 1226; நுண்ணுயிரியில் துறை - 0422-661 1294; சூழலியல் துறை - 0422-661 1252, 452, த.வே.ப.கழகம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஊட்டி, போன்: 0423-244 2170.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !