உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

ஒட்டு வெண்ணெய் பழம் டி.கே.டி.1 : அவகாடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் அதிகமாக கொழுப்புச்சத்து (30 சதம்) உள்ளதாகும். எனவே இதற்கு 'பட்டர் புரூட்' என்ற பெயரும் உண்டு. தமிழில் வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கீழ்பழனி மலை, சிறுமலை, நீலகிரி மலையின் அடிப்பகுதி, கோயம்புத்தூர் சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.'தடியன்குடிசை 1' ஒட்டு வெண்ணெய்ப்பழ இரகம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் தடியன்குடிசையில் வெண்ணெய்ப்பழ கருத்தொகுப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டு 1996ல் வெளியிடப்பட்டது. இதன் மரம் ஓரளவு பரவும் தன்மையும், மிதமாக உயர்ந்து வளரும் தன்மையும் கொண்டிருப்பதால் அதிக மரங்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பில் நடுவதற்கு ஏற்றவையாகும். ஒரு மாதத்தில் 264 கிலோ பழமும், ஒரு எக்டரில் 26 டன் மகசூலும் கிடைக்கும். பழத்தில் 23.8 சதம் கொழுப்புச்சத்து, 1.35 சதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளது. தகவல் : தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை, திண்டுக்கல் மாவட்டம்.அத்தி மோயா சீத்தாப்பழம் : இப்பழம் இதய வடிவம் கொண்டது. சதைப்பற்று அதிகமாகவும், தோல் பெரிதாகவும் இருக்கும். இது மற்ற சீத்தாப்பழங்களைப் போல் சதைப்பிரிவுகளை கொண்டிருக்கிறது. இப்பழம் வனிலா போன்ற சுவை கொண்டது. இப்பழச்சாற்றில் ஐஸ்கிரீம் மற்றும் பழக் கூழ் தயாரிக்கலாம். மொத்த கரையும் சர்க்கரையின் அளவு 22 பிரிக்ஸ். தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.ஆப்பிள் கே.கே.எல்.1 : பார்லினிஸ் பியூட்டி இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. இது குட்டையான மிதமாக பரவக்கூடிய குறைந்த குளிர்நிலைக்கு ஏற்ற இரகமாகும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்ப்பு விடத் தொடங்கி ஒரு மாதத்திற்கு 250-300 பழங்களை தரவல்லது. பழங்களை சிறு அளவில் புளிப்புத்தன்மையுடன் இருக்கும். பழங்களின் மொத்த கரையும் தன்மை 14-16 சதமாகும். தகவல் : தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல்.மஞ்சள்: கோவையிலுள்ள த.வே.ப. கழகத்தில் இயங்கி வரும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தை தகவல் மையம் மஞ்சள் விலை விவரம் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் பெரும்பாலும் ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாட்டு மஞ்சள் இரகங்களை பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளன. இதில் சேலம் நாட்டு ரக மஞ்சள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஓராண்டுக்கான மஞ்சள் தேவை 75 லட்சம் மூட்டைகள். ஆனால் இந்தியாவில் தற்போது 45 லட்சம் மூட்டைகள் தான் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் மூட்டைகள் உள்ளன.தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு, குறைவான இருப்பு ஆகிய காரணங்களால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு 7,500 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எனவே மஞ்சளை சேமித்து வைத்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொத்தமல்லி : விதைப்பதற்காக நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்த வேண்டும். எக்டருக்கு 1520 டன் தொழுஉரத்தை நிலம் தயார் செய்யும் போது இட வேண்டும். மேலும் 20 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து தரும் உரங்களை அடியுரமாக இட வேண்டும். அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை விதைப்பதற்கு ஏற்ற பருவம் விதை அளவு எக்டருக்கு 15-20 கிலோ ஆகும். விதைகளை தூவியோ அல்லது வரிசையில் 30 செ.மீ இடைவெளியில் ஊன்றியோ விதைக்க வேண்டும். முளைப்பைத் துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக விதைகளை விதைப்பதற்கு முன்பு தண்ணீரில் 6-8 மாலை நேரம் ஊறவைக்க வேண்டும்.பெருஞ்சீரகம் ராபி பருவ நடவு : முதல் வாரத்தில் நாற்றங்காலில் களை எடுக்க வேண்டும். நாற்றுகளை மாதத்தின் இரண்டாவது பிற்பகுதியில் நாற்றங்காலிலிருந்து பறித்து நட வேண்டும். நிலத்தை தயார் செய்யும் போது எக்டருக்கு 20 டன் தொழுஉரத்தை அடியுரமாக இடவேண்டும். மேலும் 45 கிலோ தழைச்சத்து மற்றும் 45 கிலோ மணிச்சத்து உரத்தை நடவுக்கு முன் அடியுரமாக இடவேண்டும். நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 15-20 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !