உள்ளூர் செய்திகள்

காட்டுப்பாக்கத்தில் வரும் 9ல் காய்கறி வளர்ப்பு பயிற்சி

காய்கறி வளர்ப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஆர்.திருமாவளவன் கூறியதாவது: செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 9ம் தேதி, காய்கறி வளர்த்தல், சந்தைப்படுத்துதல் குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில், விவசாயிகள் மற்றும் டிப்ளமோ, பட்டம் படித்த இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: ஆர்.திருமாவளவன், 82484 15501.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !