கருப்பு நிற மஞ்சளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு
மண்ணில்லாத விவசாயத்தில், கருப்பு நிற மஞ்சள் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல், ரோஜா, பாரம்பரிய ரக காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், மண்புழு உரம், மரத்துாள் ஆகியவை பயன்படுத்தி செம்பருத்தி, டிராகன்பழம், கருப்பு நிற மஞ்சள் ஆகிவை சாகுபடி செய்து வருகிறேன்.பொதுவாக, கருப்பு நிற மஞ்சள், வட மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். தமிழகத்தில் சாகுபடி செய்வோரின் எண்ணிக்கை குறைவு. கருப்பு நிற மஞ்சளால், பண வரவுக்கு வாய்ப்பு இருப்பதால், சந்தையில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.தனஞ்செயன், 88257 46684