கூடுதல் மகசூலுக்கு குஜராத்- ரக வேர்க்கடலை
குஜராத் - 36 ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த பி.சந்திரசேகரன் கூறியதாவது:நம்மூரில் சாகுபடி செய்யப்படும் வேர்க்கடலை ரகங்களை காட்டிலும், குஜராத் ரக வேர்க்கடலை கூடுதல் மகசூல் கொடுக்க வல்லது என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.அதை ஏற்று, முதல் முறையாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குஜராத்- - 36 ரக வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளேன். இது, 95 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வரும். பிற ரகங்களை காட்டிலும் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய ரகமாகும்.ஒரு ஏக்கருக்கு, 30 மூட்டைகள் வரையிலும் மகசூல் பெற முடியும்.இது, நம்மூரில் சாகுபடி செய்யப்படும் பிற ரக வேர்க்கடலை காட்டிலும், 10 மூட்டை வேர்க்கடலை கூடுதலாக கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.சந்திரசேகரன்,88388 85322.