நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஆஸி., ரக மாம்பழம்
ஆர்., 2 மற்றும் இ., 2 ஆஸ்திரேலியா ரக மாம்பழம்சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், ஆர்., 2 மற்றும் இ.,2 ஆஸ்திரேலியா ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளோம்.ஏறக்குறைய, நம்மூர் ரூமானி மாம்பழத்தை போல, அதிக சதைப் பற்றுடன் இருக்கும். விதை குறைந்த அளவில் இருக்கும். நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு நன்றாக வளர்க்கிறது.பிற நாட்டின் பழம் என்பதால், மண்ணின் தன்மைக்கு ஏற்ப, பழத்தின் சுவை மாறுபடுகிறது. இருப்பினும், செம்மண் நிலத்தில் அதிக சுவையுடன் காணப்படுகிறது. புது ரக மாம்பழம் என்பதால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.