உள்ளூர் செய்திகள்

வெள்ளை நிற மக்காச்சோளம் களிமண் நிலத்தில் சாகுபடி

மணல் கலந்த களிமண் நிலத்தில், வெள்ளை நிற மக்காச்சோளம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதி காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன். மணல் கலந்த களிமண் நிலத்தில், காய்கறி ஆகிய தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ளேன். இந்த பயிர்களுக்கு, வரப்பு பயிராக பலவித மக்காச்சோளத்தை நட்டுள்ளேன்.குறிப்பாக, வெள்ளை நிற மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். இது, பிற ரக மக்காச்சோளத்தைக் காட்டிலும், வெள்ளை நிற மக்காச்சோளத்திற்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.பொதுவாக, காய்கறி பூச்சி தாக்குலை கட்டுப்படுத்துவதற்கு, வரப்பு ஓரம் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். சோளத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலும், காய்கறிகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.இந்த வெள்ளை நிற மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நல்ல மகசூலும் கொடுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. குகன், 94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !