நோய் எதிர்ப்பு திறன் கொண்ட குதிரைவால் சம்பா நெல்
மணல் கலந்த செம்மண் நிலத்தில், குதிரைவால் சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், குதிரைவால் சம்பா ரக நெல்லும் ஒன்றாகும். இது, சன்ன ரகமாகும். நடவு செய்து, 125 நாட்களில் நெல் அறுவடைக்கு வரும்.திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகமாகும். நம்மூர் மணல் கலந்த செம்மண் நிலத்திற்கு நன்றாக வளர்கிறது. நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.குறிப்பாக, குதிரைவால் சம்பா ரக நெல் முனை, குதிரையின் வால் போல் நீண்டிருப்பதால், இந்த பெயர் வரக் காரணமாக அமைந்தது. இதில், நோய், பூச்சி தாக்குதல் அறவே இல்லை. ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டை வரையில் நெல் மகசூல் பெறலாம்.இந்த அரிசியில், நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், அனைத்து வித சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. பல்வேறு விதமான நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.