உள்ளூர் செய்திகள்

வருவாய்க்கு உகந்த சர்க்கரை ரக கேலி வாழை

சர்க்கரை கேலி ரக வாழை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சர்க்கரை கேலி ரக மஞ்சள் வாழை சாகுபடி செய்துள்ளோம்.இந்த வாழைப்பழம், ஏறக்குறைய ரஸ்தாலி, செவ்வாழை பழத்தை போல இனிப்பு சுவையுடன் இருக்கும். பிற மாநிலத்தில் விளையும் பழம் என்பதால், நம்மூர் மண்ணுக்கு வராது என்பது முற்றிலும் தவறானது.நம்மூர் மண் மற்றும் மாடி தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். குறைந்த உயரத்தில் காய்க்கக்கூடிய வாழை ரகமாகும். இது, சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு:பி.கிருஷ்ணன், 98419 86400.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !