உள்ளூர் செய்திகள்

மலை மண்ணிலும் மல்பெரி சாகுபடி

மல்பெரி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:மலை மண் தோட்டத்தில், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழக்கன்றுகளை நட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், மல்பெரி பழச்செடி சாகுபடி செய்துள்ளேன்.இது, ஏறக்குறைய சிறிய ரக திராட்சை கொத்து போல இருக்கும் பழச்செடியாகும். ஐந்து அடி உயரத்தில் மட்டுமே வளரும். பழங்கள் இலைக்குஅடியில் கொத்துக்கொத்தாக காய்க்கும். காய் பச்சை நிறத்திலும், செம்பழம் இளஞ்சிவப்பு நிறத்திலும், பழமாகும் போது கறுப்பு நிறத்திலும் மாறிவிடும். மல்பெரி பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !