மகசூலுக்கு ஏற்ற பர்பிள் மாம்பழம்
நாம்டோக் மாயி பர்பிள் ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, நாம்டோக் மாயி பர்பிள் ரக மாம்பழம், மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், சாகுபடி செய்யலாம். குறிப்பாக, தாய்லாந்து நாட்டில் அதிகம் விளைவதால், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில், விளைச்சல் தரக்கூடியது. இது, மாம்பழம் இல்லாத நேரத்தில் காய்ப்புக்கு வருவதால், கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.சசிகலா, 94455 31372.