உள்ளூர் செய்திகள்

நீண்ட கால பயிருக்கு உகந்தது தென்னை கழிவு போர்வை

தென்னைக்கழிவு போர்வை அமைப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி எம்.பரத் கூறியதாவது:ஏரிநீர் பாசனம் பெறக்கூடிய, களிமண் ரக நிலத்தில், உயரப்பாத்தி முறையில், ஈட்டி, வேங்கை, தென்னை, நாவல் உள்ளிட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.இதில், ஊடுபயிராக அன்னாசி பழம் சாகுபடி செய்துள்ளேன். ஒவ்வொரு பழக்கன்றுக்கும், 2 அடி இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.நீண்ட காலத்திற்கு பின், மகசூல் கொடுக்கும் அனைத்து விதமான பயிர்களுக்கு, தென்னை உடைத்து போட்டு, செடிகளை சுற்றிலும் போர்வை பயன்படுத்தலாம்.இது, கோடை காலத்தில், செடிகளுக்கு ஈரம் காத்து கொடுக்கும். மழைக்காலத்தில் உரமாக மாறிவிடும்.சில நேரங்களில் தென்னையில் இருக்கும் ஓடுகளை அகற்றிவிட்டு போட்டால், எளிதாக மக்கும் தன்மை உடையது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.பரத், 97899 96963.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !