உள்ளூர் செய்திகள்

அதிக வருவாய்க்கு நாக்பூர் புளிச்சை கீரை சாகுபடி

நாக்பூர் ஜாம் புளிச்சை கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.மணல் கலந்த களிமண் நிலத்தில், காய்கறி பயிர்களை பயிரிட்டுள்ளேன். அந்த வரிசையில், ஜாம் புளிச்சை கீரை சாகுபடி செய்துள்ளேன்.நாக்பூரில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் கீரை வகை என்பதால், நம்மூரில் எப்படி வளர்க்கிற என, சோதனை ஓட்டத்திற்கு நட்டுள்ளேன். நன்றாக வளர்க்கிறது. கீரையும் சுவையாக இருக்கிறது. இந்த கீரை சாகுபடியில், நல்ல வருவாய் ஈட்டலாம்.குறிப்பாக, ஜாம் புளிச்சை கீரை அறுவடைக்கு பின், விதைகளின் இதழ்களை எடுத்து சேகரித்து, ஜாம் தயாரிக்க விற்பனை செய்யலாம்.பதப்படுத்தி விற்பனை திறன் இருந்தால், ஜாம் புளிச்சை கீரையில் அதிக வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி. குகன்,94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !