உள்ளூர் செய்திகள்

இரு விதங்களில் பாதாம் சாகுபடி

பாதாம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், ஆண்டு முழுதும் மகசூல் கொடுக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், பாதாம் செடிகளை வரப்பு பயிராக சாகுபடி செய்துள்ளேன்.இது, நம்மூர் மலை மண்ணின் சீதோஷ்ண நிலை தாங்கி வளர்கிறது. ஒட்டுச்செடி மற்றும் விதை செடி என, இரு விதங்களில் சாகுபடி செய்யலாம். ஒட்டுச்செடியில், மூன்று ஆண்டுகளில் மகசூல் கிடைக்கும். பாதாம் பருப்பாகவும், எண்ணெய்யாகவும் தயாரித்து விற்பனை செய்யலாம். இது, சீசனில்மட்டுமே அறுவடை செய்து, மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து விற்பனை செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.வெங்கடபதி,93829 61000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !