உள்ளூர் செய்திகள்

கூடுதல் வருவாய்க்கு மரவள்ளி சாகுபடி

சவுடு மண்ணில், மரவள்ளி சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், சவுடு மண்ணில், மரவள்ளி சாகுபடி செய்துள்ளேன். இது, நன்றாக மகசூல் கொடுக்க துவங்கி உள்ளது. இந்த மர வள்ளி சாகுபடிக்கு, இயற்கை உரங்களை பயன்படுத்துவதால், மர வள்ளி கிழங்குகள் நீளமாகவும் பருமனாகவும் இருக்கின்றன.இந்த மரவள்ளி கிழங்கு பிடிக்காதவர்களும், கிழங்குகளின் தோற்றம் பார்க்கும் போது, வாங்கி செல்ல விரும்புவர். இதில், சிப்ஸ் மற்றும் மாவு ஆகிய மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !