உள்ளூர் செய்திகள்

கொய்யா சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்

கொய்யா விளைச்சலை துாண்டும் தொழில்நுட்பம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் டி.எல்.பிரீத்தி கூறியதாவது:குளிர் காலம் நிறைவு பெற்ற பின், கோடை காலம் துவங்கும் போது, கொய்யா மரங்களின் கிளைகளை கத்தரிக்க வேண்டும். ஒவ்வொரு கொய்யா மரமும், மூன்று அடி உயரத்திற்கு மேல் வளர விடக்கூடாது. அதற்கேற்ப பக்க வாட்டு கிளைகளைகத்தரிக்க வேண்டும். கொய்யா மகசூல் எடுக்கும் போது, அடர்த்தியாகவும், அதிக வளர்ச்சிக்கு ஏற்ப வழி வகை செய்ய வேண்டும். இது போல செய்யும் போது, காய்க்கும் தன்மை அதிகரிக்கும்.இதுதவிர, பூ பூக்கும் போது இயற்கை உரங்களை தெளித்து பூக்கள் கொட்டாமல் மகசூல் பெறலாம். இதுபோன்ற முறைகளை கையாளும்போது, கொய்யா சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: டி.எல்.பிரீத்தி,99948 83132.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !