உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜூலையில் டபுள் டெக்கர் மேம்பாலம் திறப்பு?

ஜூலையில் டபுள் டெக்கர் மேம்பாலம் திறப்பு?

பெங்களூரு: கிகுட்டா - சில்க்போர்டு ஜங்ஷனில் கட்டப்பட்டு வரும் டபுள் டெக்கர் மேம்பாலம், வரும் ஜூலையில் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. இது தென்னகத்திலேயே, முதல் டபுள் டெக்கர் மேம்பாலம் என்ற பிரசித்தி பெற்றுள்ளது.பெங்களூரு மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:டபுள் டெக்கர் மேம்பாலத்தின், முதல் கட்டத்தில் வாகனங்கள் இயங்கும். இரண்டாவது கட்டத்தில் ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் பாதை இருக்கும். இப்பாதையில் தண்டவாளம், மெட்ரோ நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.இப்பாதையில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயங்கும். நடப்பாண்டு ஜூலையில் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. இது தென்னகத்திலேயே, முதல் டபுள் டெக்கர் மேம்பாலம் என்ற பெருமை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மார் 04, 2025 12:38

தவறான தகவல்- 1977-80 காலகட்டத்தில் நெல்லையில் தொடர் வண்டிச் சந்திப்பில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது- சென்னையில் வட பழனி சந்திப்பில் இரண்டடுக்கு மேம்பாலம்- மெட்ரோ ரயிலிற்கும், சாலைப் போக்குவரத்திற்கும் உள்ளது


புதிய வீடியோ