உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இலைப்புள்ளி நோய் பாக்கு மரங்களுக்கு நிதி

இலைப்புள்ளி நோய் பாக்கு மரங்களுக்கு நிதி

பெங்களூரு: மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் கிஷோர்குமார் கேட்ட கேள்விக்கு, தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுன் அளித்த பதில்:இலைப்புள்ளி மற்றும் மஞ்சள் இலை நோயால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாக்கு மரங்கள் பாதிக்கப்பட்டன. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு 67.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.பயிர்களின் பாதிப்பு தன்மையை பார்த்து எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது குறித்து, அரசு கணக்கெடுத்து வருகிறது. கூடிய விரைவில் இழப்பீடு வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு 60:40 சதவீதமாக உள்ளது.வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ், பாக்கு அறுவடை இயந்திரம் வாங்க பொதுப்பிரிவினருக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். பட்டியல் சாதியினருக்கு 40 சதவீதமும், பழங்குடியினருக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த நிபுணர்கள் பரிந்துரைபடி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, விவசாயிகளுக்கு ஹெக்சோகோனசோல், டெபுகோனசோல், புரோபிகோனசோல், புரோபினாப் ஆகிய தாவர பாதுகாப்பு பொருட்கள், வினியோகம் செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை