மேலும் செய்திகள்
நடமாடும் வாகனத்தில்மாநகரில் வரி வசூல்
19-Feb-2025
பெங்களூரு: வீடுகளிலிருந்து குப்பை பெறுவதற்கு ஒரு வீட்டிற்கு 10 முதல் 400 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரில் அள்ளப்படும் குப்பை அனைத்தும், மிட்டகனஹள்ளி பகுதியில் கொட்டப்படுகிறது. சில நாட்களாக அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், பெங்களூரு வாசிகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குப்பை சேகரிப்பில், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை கழகம், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையிடம் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் குப்பை பெறுவதற்கு மாதம் 10 முதல் 400 ரூபாய் வரை வசூல் செய்யலாம். இதன் மூலம், நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு, ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
19-Feb-2025