உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐஸ்வர்யா கவுடாவுக்கு உதவி போலீஸ்காரர் அதிரடி கைது

ஐஸ்வர்யா கவுடாவுக்கு உதவி போலீஸ்காரர் அதிரடி கைது

பெங்களூரு: நகைக்கடைகளில் மோசடி செய்த வழக்கில் கைதான ஐஸ்வர்யா கவுடாவுக்கு, அரசியல்வாதிகளின் மொபைல் போன் அழைப்பு விபரத்தை கொடுத்த, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தின் ஐஸ்வர்யா கவுடா, 34. இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, பெங்களூரில் ஒரு நகைக்கடையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை வாங்கி மோசடி செய்தார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமினில் வெளியே வந்தார். மேலும் இரு நகைக்கடை உரிமையாளர்கள், தங்களிடமும் ஐஸ்வர்யா மோசடி செய்ததாக, போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து விசாரணை நடக்கிறது.ஐஸ்வர்யா பயன்படுத்திய மொபைல் போனை, போலீசார் பறிமுதல் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் மொபைல் எண்கள் அவரிடம் இருந்தது தெரியவந்தது.பல அரசியல்வாதிகளின் மொபைல் போன் அழைப்பு விபரத்தை, ஐஸ்வர்யா சட்டவிரோத பெற்றதும், விசாரணை அதிகாரியான ஏ.சி.பி., பரத் ரெட்டிக்கு தெரிந்தது. இதுகுறித்து அவர் பேட்ராயனபுரா போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், மொபைல் போன் அழைப்பு விபரத்தை கொடுத்ததாக, ராம்நகரின் சென்னப்பட்டணா அக்கூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் சுனில், 35, என்பவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். ஐஸ்வர்யாவிடம் பணம் வாங்கிக் கொண்டு, மொபைல் அழைப்பு விபரங்களை கொடுத்தது தெரிந்தது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ