உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முட்டையை மறுக்கும் பள்ளி மாணவர்கள்

முட்டையை மறுக்கும் பள்ளி மாணவர்கள்

பெங்களூரு: பறவை காய்ச்சல் பீதியால், அரசு பள்ளிகளில் மதிய உணவுடன், முட்டை சாப்பிட மாணவர்கள் தயங்குகின்றனர். முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் கேட்கின்றனர்.மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காண, பள்ளிகளில் வாரத்தில் ஆறு நாட்கள் மதிய உணவுடன் வேக வைத்த முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது.தற்போது பல்லாரி, ராய்ச்சூர், சிக்கபல்லாபூர் ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இந்த பீதியால், பள்ளிகளிலும் சத்துணவில் முட்டை வழங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.முட்டை சாப்பிட மாணவர்கள் தயங்குகின்றனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கும்படி வலியுறுத்துகின்றனர். இவர்களின் பயத்தை புரிந்து கொண்ட ஆசிரியர்களும் வாழைப்பழங்களை அதிகம் விநியோகிக்கும்படி, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.'முட்டை, கோழி இறைச்சியால் பறவை காய்ச்சல் பரவாது. அவற்றை நன்றாக வேக வைத்து சாப்பிட்டால், பிரச்னை ஏற்படாது' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியும், மக்களின் பீதி குறையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை