உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பட்ஜெட் தாக்கல் செய்த போது இடஒதுக்கீடு கேட்டு கோஷம்

பட்ஜெட் தாக்கல் செய்த போது இடஒதுக்கீடு கேட்டு கோஷம்

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த ஏழு பேர், உள் இடஒதுக்கீடு கேட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதல்வர் சித்தராமையா நேற்று பட்ஜெட் வாசித்து கொண்டு இருந்தார். அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த ஏழு பேர் திடீரென, 'உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று கூறி கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விதான் சவுதா மார்ஷல்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏழு பேரையும் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து வெளியேற்றினர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விதான் சவுதா போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏழு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.'பல ஆண்டுகளாக உள்இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கஷ்டத்தை, முதல்வருக்கு தெரியப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினோம்' என்று கூறி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 2023 ம் ஆண்டு, சட்டசபைக்குள் நுழைந்த ஒரு நபர் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கையில் அமர்ந்ததும், பின், அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ