யூ கங்களுக்கு பதில் கிடையாது: அமைச்சர் பாட்டீல் ஓப்பன் டாக்
பெங்களூரு: ''காங்கிரஸ் தலைவரின் அறிக்கையாக இருந்தாலும் சரி, அரசியல் யூகங்களுக்கு பதில் அளிக்க மாட்டேன்,'' என அமைச்சர் எச்.கே.பாட்டீல் தடாலடியாக கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியதாவது:அமைச்சரவை விரிவாக்கம்; ஒருவர் பதவியில் இருக்க வேண்டுமா அல்லது நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன். இது போன்ற தேவையற்ற விவாதங்களில் பங்கேற்க மாட்டேன்.பலருடைய யூகங்களுக்கு கருத்து தெரிவிக்க மாட்டேன். காங்கிரஸ் மாநில தலைவரின் அறிக்கையாக இருந்தாலும் சரி; அமைச்சருடைய அறிக்கையாக இருந்தாலும் சரி.மத்திய அரசு கர்நாடகாவிற்கு போதுமான நிதியை வழங்காமல், மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிறது. மாநில அரசு பல திட்டங்கள் மூலம் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வறுமையை ஒழிக்கவும் போராடுகிறது.இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது. முதல்வர் சித்தராமையா, அவர் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என நம்புகிறேன்.கன்னடர்களும், மராத்தியர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் சில சமூக விரோதிகள் பிரச்னைகளை துாண்டி விடுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.