உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஈஷா யோகா மையம் சென்றது என் தனிப்பட்ட விருப்பம்; விமர்சனத்துக்கு கர்நாடகா துணை முதல்வர் பதில்

ஈஷா யோகா மையம் சென்றது என் தனிப்பட்ட விருப்பம்; விமர்சனத்துக்கு கர்நாடகா துணை முதல்வர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: மகா சிவராத்திரி விழாவுக்காக, கோவை ஈஷா யோகா மையம் வந்து சென்றது தொடர்பான சக கட்சியினர் புகார்களுக்கு, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.கர்நாடகாவில் துணை முதல்வராக இருப்பவர் சிவக்குமார். இவர், சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வழிபட்டார். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றார். அமித் ஷா பங்கேற்ற, சத்குரு நடத்திய விழாவில் சிவக்குமார் பங்கேற்றது தவறும் என்றும், அவர் ஆர்.எஸ்.எஸ்.,க்கு நெருக்கமாகி விட்டார் என்றும், எதிர் கோஷ்டி காங்கிரஸ் கட்சியினர் புகார் கிளப்ப ஆரம்பித்தனர்.இது குறித்து சிவக்குமார் கூறியதாவது: சத்குரு கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் காவிரி நீர் விவகாரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவர் நேரடியாக வந்து எனக்கு அழைப்பு விடுத்தார். ஏராளமானோர் அவரை பின் தொடர்கின்றனர். சிறப்பான பல பணிகளை அவர் செய்து கொண்டிருக்கிறார்.அந்த விழாவில், பல எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதனால் நானும் பங்கேற்றேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை; விருப்பம்.என் தொகுதியில் உள்ளூர் மக்கள், 100 அடி உயரத்தில் ஏசுநாதர் சிலை நிறுவினர். உடனே பா.ஜ., கட்சியினர் என்னை, 'ஏசுகுமாரா' என்று கூறினர்.நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து சமூகத்தினரையும் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கையானது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைப்பதே. எனவே தான் அந்த விழாவில் நான் பங்கேற்றேன். சிலருக்கு அது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V.Mohan
மார் 03, 2025 12:29

விடியல் விசுவாசிகளே இந்தியா இந்து நாடாக, ஆன்மீக பூமியாகத்தான் இருந்தது, இனியும் இருக்கும். வந்தேறி மதங்கள், இந்து மக்களை மதம் மாற்றியதால் தான் மற்ற மதங்கள் இங்கு உள்ளன. என்னவோ வந்தேறி மதங்கள் இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்த மாதிரி முட்டு கொடுக்கும் எதிரிகள் தங்கள் திருவாய் திறக்காமல் இருந்தால் நல்லது. இல்லைன்னா நல்லா திறக்க முடியாமயே போகும்.....


Mecca Shivan
மார் 02, 2025 19:50

பின்ன ..சித்ததுவை தூக்கணும் ..தான் பதவிக்கு வரணும்.. அதுக்கு சித்ததுமேல இருக்கிற வழக்குகளை பலப்படுத்தனும் .. அதுக்கு பிஜேபி உதவனும் ..அதுக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸ் சாமியார்தான் உதவமுடியும்


அப்பாவி
மார் 02, 2025 13:54

பெருமாள் ஏன் காங்கிரஸ் காரர்கள் இந்து பூஜை கலந்து கொண்ட உனக்கு எரியுதோஇதே கிறிஸ்துவர் ஒருவர் அவர் சம்பந்தப்பட்ட மத போதனையை கலந்து கொண்டால் நீ என்ன சொல்வாய்


s.sivarajan
மார் 02, 2025 13:24

பொருளாதாரம், அரசியலுக்கு அப்பாற்பட்டது


Sudha
மார் 02, 2025 12:25

விமர்சனத்திற்கு செய்தவர்கள் ., ???


Shekar
மார் 02, 2025 12:15

காங்கிரஸ் மோடி எதிர்ப்பு இந்து மத எதிர்ப்பாக மாறி உள்ளது. இந்த சம்பவம் மட்டும் அல்ல, ராமர் கோயில், கும்பமேளா, போன்றவை இதை நிரூபிக்கின்றன.


Ganapathy
மார் 02, 2025 12:03

மிகச் சரியான கருத்து. இவர் தெளிவாக நான் இறந்தாலும் ஹிந்துவாகத்தான் இறப்பேன் என்று சொன்னது கபோதி காங்கிரஸுக்கு தெரியாதா? குல்லாக்களுக்கும் பாவாடைகளுக்கும் சொம்படிச்சே பிழைக்கும் காங்கிரஸ்.


எவர்கிங்
மார் 02, 2025 11:31

அந்த ராகுல் ஒப்புக்குவாரா


பிரேம்ஜி
மார் 02, 2025 11:15

இது அவரது தனிப்பட்ட விஷயம்! கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!


Krishna
மார் 02, 2025 10:55

இந்த எடுபட்ட பயல்களுக்கு இந்து மதம் என்றால் ஏன் இப்படி வயிறு எரிகிறது


Shankar
மார் 02, 2025 13:12

மதம் மாறிய காபிர்களுக்கு இந்துக்கள் சிறந்து தென்பட்டால் பற்றி எரிவது ஒன்றே சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை