உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விஷக்காய் சாப்பிட்ட 12 குழந்தைகள் அட்மிட்

விஷக்காய் சாப்பிட்ட 12 குழந்தைகள் அட்மிட்

சாம்ராஜ்நகர் : பழம் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாம்ராஜ்நகரில் உள்ள யலந்துார் தாலுகாவில் கரும்பு அறுவடை சீசன் துவங்கி உள்ளது. கரும்பு அறுவடை செய்வதற்காக, மஹாராஷ்டிராவில் இருந்து கூலித்தொழிலாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் யலந்துார் தாலுகாவின் பல பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். இவ்வரிசையில், யாரியூர் கிராமத்தில் குடும்பத்துடன் முகாமிட்டுள்ள மஹாராஷ்டிராவை சேர்ந்த கூலி தொழிலாளிகளின் 12 குழந்தைகள் நேற்று முன்தினம் வயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பழம் என நினைத்து விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகள் சாப்பிட்டனர். இதனால், அவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதை பார்த்த அங்கிருந்தோர், தங்கள் குழந்தைகளை யலந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், தீவிர சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 12 குழந்தைகளும் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் 6 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் எந்த புகாரும் அளிக்கவில்லை' என, யலந்தூர் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ