மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ., வர 7 நிறுவனங்களுக்கு செபி அனுமதி
22-Oct-2025
பெங்களூரு: கர்நாடகாவில் 13 நிறுவனங்கள் 27,607 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாநில உயர்மட்ட திட்ட அனுமதி குழுவின் கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: கர்நாடகாவில் 13 நிறுவனங்கள் 27,607 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. எனவே, புதிய முதலீடுகள், திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்தப்படாது. புதிய நிறுவனங்கள் துவங்குவதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். தங்கள் தொழில்களை புதிய நிறுவனங்கள் துவங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறையினர் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி வழங்க காலம் தாழ்த்த கூடாது. காலம் தாழ்த்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2024 - 25 நிதியாண்டில் கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடகா சோப்பு மற்றும் டிடெர்ஜன்ட்ஸ் நிறுவனம் 1,700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இதில், 451 கோடி ரூபாய் லாபம் மட்டுமே. இந்த லாபத்தில் 30 சதவீதம் அதாவது, 135 கோடி ரூபாய் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினேன். கே.எஸ்.டி.எல்., வருவாய் ஈட்டுவதில் புதிய சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
22-Oct-2025