உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வடலுார் சத்ய தருமசாலை 159ம் ஆண்டு துவக்க விழா

வடலுார் சத்ய தருமசாலை 159ம் ஆண்டு துவக்க விழா

வள்ளலார் பெருவெளியில் திகழும் சத்ய தருமசாலையை, மக்கள் பசிப்பிணி போக்க 1867ல் வள்ளலார் துவக்கி வைத்தார். இந்த அணையா அடுப்பு 158 ஆண்டுகள் நிறைவு பெற்று, 159ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றத்துடன் வடலுாரில் நடந்தது.பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார். டி. முனுசாமி, ஆஞ்சநேயன், விட்டல் குமார் பங்கேற்றனர். வள்ளலாரின் சத்ய ஞான சபை, சத்ய தரும சாலை உள்ளடக்கிய பெருவெளி பகுதியை, புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏற்கனவே, எஸ்.டி.குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இது தொடர்பாக, வடலுாரில் உள்ள பல்வேறு வள்ளலார் அமைப்பினர், வள்ளலார் தெய்வ நிலைய அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன் உட்பட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினருடன் ஆலோசித்தார்.இதன் பின், எஸ்.டி.குமார் கூறுகையில், ''வள்ளலாரின் பெருவெளி பகுதியை புனித பூமியாக அறிவிக்க வேண்டும். மருதுார், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய மூன்று பகுதிகளையும் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக, எங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்,'' என்றார்வடலுார் சன்மார்க்க அமைப்பின் சாது ஹரி, அன்பர் சந்தோஷ், சன்மார்க்க முருக வேல், தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி