உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  10 மாதங்களில் 18,246 பாம்பு கடி

 10 மாதங்களில் 18,246 பாம்பு கடி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பத்து மாதங்களில் 18,246 பாம்பு கடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில சுகாதாரம், குடும்ப நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காலப்போக்கில் வனப்பகுதி குறைந்து வருவதால் பாம்புகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருகின்றன. பாம்புகளை பார்க்கும்போது, அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம். அவற்றை பிடிக்க முயற்சிக்க கூடாது. பாம்பு கடித்தால் வீட்டு வைத்தியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். எந்த வகையான பாம்பு கடியையும் மக்கள் அலட்சியமாக எடுத்து கொள்ளக் கூடாது. மாநிலத்தில் கடந்த பத்து மாதங்களில் 18,246 பாம்பு கடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 125 பேர் இறந்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 512 பாம்பு கடி வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும் பாம்பின் விஷத்தை முறிக்கும் மருந்துகள் இருப்பு வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை