உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ராம்நகர்: கனகபுராவின், அர்க்காவதி ஆற்றில் உணவு தேடி வந்த இரண்டு காட்டு யானைகள், நீரில் மூழ்கி உயிரிழந்தன. பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின் சாத்தனுார் வன மண்டலத்தின், குன்னுாரில் உள்ள அர்க்காவதி ஆற்று பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி வந்தன. ஆற்றை கடப்பதற்காக நீரில் இறங்கின. நீரில் ஏராளமான களைகள் வளர்ந்திருந்தன. இந்த கொடிகள் யானைகளின் கால்களில் சிக்கிக்கொண்டன. முன்னோக்கி செல்ல முடியவில்லை. பின்னுக்கும் நகர முடியவில்லை. நீரில் இருந்து வெளியே வர முடியாமல், மூழ்கி உயிரிழந்தன. நேற்று காலை அப்பகுதியினர், நீருக்குள் இருந்த யானைகளை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானைகளை காப்பாற்ற முற்பட்ட போது, இறந்துவிட்டது தெரிந்தது. இவற்றின் உடல்களை வெளியே கொண்டு வரும் பணி நடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு யானைகள் இறந்ததால், விலங்கு ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !