மேலும் செய்திகள்
கணவர் 'டார்ச்சர்' மனைவி தற்கொலை
19-May-2026
கிணற்றில் விவசாயி சடலம் மீட்பு
13-Jun-2026
மாதநாயக்கனஹள்ளி: பெங்களூரு டி.தாசரஹள்ளியில் வசிப்பவர் நவீன்குமார். இவர் தனது மனைவி காவ்யா, 2 வயது மகன் தீக் ஷித்துடன், இரண்டு நாட்களுக்கு முன், தொட்டதகுட்டஹள்ளியில் வசிக்கும் உறவினர் வீட்டிற் கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வீட்டின் முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்த தீக் ஷித், எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தீக் ஷித்தை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, குழந்தை கோமாவுக்கு சென்றது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை தீக் ஷித் இறந்தார். மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-May-2026
13-Jun-2026