உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 

தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 

பெலகாவி: பெலகாவியில், தெருநாய் கடித்து இரண்டு வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்தது. பெலகாவி டவுன் மாருதிநகரில் வசிப்பவர் உமேஷ் தர்கர். இவரது இரண்டு வயது பெண் குழந்தை ஆராத்யா. வீட்டின் முன் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த தெருநாய், குழந்தை மீது பாய்ந்து கடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்லால் அடித்து நாயை விரட்டினர். நாய் கடித்ததில் குழந்தையின் நெற்றி, கன்னம், உதட்டில் படுகாயம் ஏற்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறியது. பெலகாவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். தெருநாயை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி ஊழியர்கள் மீது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி