உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெறி நாய்கள் கடித்து 20 பள்ளி குழந்தைகள் காயம்

வெறி நாய்கள் கடித்து 20 பள்ளி குழந்தைகள் காயம்

மைசூரு : நஞ்சன்கூடில் வெறி நாய்கள் கடித்ததில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர்.மைசூரு மேட்டகள்ளியில் மஹாலிங்கேஸ்வரா கோவில் காளை 'பசவா'வை, கடந்த வாரம் வெறி நாய் ஒன்று கடித்தது. காளைக்கு சிகிச்சை அளிக்க தாமதமானதால், அது உயிரிழந்தது.இந்நிலையில், நஞ்சன்கூடின் ஹூல்லஹள்ளி கிராமத்தில், கடந்த மூன்று நாட்களாக, அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் ஒன்று, 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை கடித்துள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பி உள்ளனர்.கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஹூல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தின் அலட்சியத்தால், தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சில நாய்களுக்கு வெறி பிடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை, வெறி நாய்கள் கடித்துள்ளன. இதனால் பள்ளிக்கு செல்ல குழந்தைகள் அச்சமடைகின்றனர்.பஞ்சாயத்து நிர்வாகத்தினர், தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு, குழந்தையை கடித்ததாக ஒரு நாயை, பொது மக்களே கல்லால் அடித்துக் கொன்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை