உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  4 ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 4 ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மழைநீர் கால்வாய்:  மஹாதேவபுரா மண்டலத்தில் 150 கி.மீ., மழைநீர் கால்வாய்களில், 72 கி.மீ.,க்கு இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.  மழைநீர் கால்வாய்களில் அபாயகரமான 58 பகுதிகள் கண்டறியப்பட்டு, 38 பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.  தேசிய பேரிடர் நிதியின் கீழ் சித்தாபுரா, பெலிஷிவலே, பாலகெரே, எமலுார் போன்ற பகுதிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏரிகள் :  45 ஏரிகளில் 40 ஏரிகளின் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள நான்கு ஏரிகளின் மேம்பாட்டுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு  ஏரிகள் பராமரிக்கு ஆண்டுக்கு 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு  10 ஏரிகளில் தடுப்புகள் அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு  ஏரிகளில் நீரின் தரத்தை உயர்த்த, 'ஏரேட்டர்கள்', மிதக்கும் ஈர நிலங்கள் அமைத்தல், டிஜிட்டல் கண்காணிப்பு போன்ற நடவடிக்கை செயல்படுத்தப்படும்  ஏரிகள் பாதுகாப்புக்கான சமூக பங்கேற்பு கொள்கை - 2024 செயல்படுத்தப்படும்  பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்பினருடன் இணைந்து ஏரிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் காவல் பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !