உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பசுவதை தடை சட்டத்தை மீறியதாக 268 வழக்குகள்

பசுவதை தடை சட்டத்தை மீறியதாக 268 வழக்குகள்

பெங்களூரு : 'கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், கடந்த மூன்று ஆண்டுகளில், 268 வழக்குகள் பதிவாகி உள்ளன' என, மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பீதர் மாவட்டம் மெஹபூப் நகரில் 25 பசுக்கள், கன்றுகள் சட்ட விரோதமாக கட்டிவைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சாலகராவுக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் அங்கு தன் ஆதரவாளர்களுடன் வந்த அவர், பசுக்களை மீட்டு, கோ சாலைக்கு அனுப்பி வைத்தார்.அப்போது முன்னாள் எம்.எல்.சி., விஜய் சிங் குறித்து அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. விஜய் சிங் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ., உட்பட ஏழு பேர் மீது, நேற்று பீதர் போலீசில் புகார் அளித்தனர்.கடந்த 2023ல் பசுவதை தடை சட்டம் அமலான பின், 2023ல் 112 வழக்குகளும்; 2024ல் 134 வழக்குகளும்; 2025 மே வரை 22 வழக்குகளும் பதிவாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை