உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயிலில் விதிமீறல்; 27,000 பேருக்கு எச்சரிக்கை

மெட்ரோ ரயிலில் விதிமீறல்; 27,000 பேருக்கு எச்சரிக்கை

பெங்களூரு : 'பெங்களூரில் கடந்த ஆறு மாதங்களில், மெட்ரோ ரயில் விதிகளை மீறிய, 27,000 பேருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது' என நம்ம மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், விதிமுறைகள் மீறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம்ம மெட்ரோ நிர்வாகம், 2024 செப்டம்பர் முதல் 2025 மார்ச் வரை ஆறு மாதங்களில், 27,000 பேர் மெட்ரோ ரயில் விதிமுறைகள் மீறி உள்ளனர்.இவர்களில், 11,922 பேர், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு, மற்ற பயணியருக்கு தொந்தரவு கொடுத்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணியர், குழந்தைகளுடன் பயணிப்போருக்கு சீட் வழங்காமல், 14,162 பேர் பயணித்து உள்ளனர்.பயணிக்கும் போது சாப்பிட்டதாக, 554 பேரும், அளவுக்கு அதிகமான லக்கேஜ்களை கொண்டு வந்ததாக, 474 பேரும் என மொத்தம் 27,112 பேர் விதிமுறைகளை மீறி உள்ளனர்.இவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை என்றாலும், 'மெட்ரோ பாதுகாப்பு படையினர்' அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். எனவே, மெட்ரோ ரயிலில் பயணிப்போர், கண்டிப்பாக விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை