மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்... விழுப்புரம்
31-Mar-2025
பன்னர்கட்டா: மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, மனைவி கண்முன் குத்தி கொன்ற, மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.பெங்களூரு பன்னர்கட்டா அருகே கெஞ்சனயதொட்டியில் வசித்தவர் சுரேஷ், 33. கடந்த 25ம் தேதி இரவு மதுக்கூடத்தில் மது அருந்தினார். அப்போது பக்கத்து டேபிளில் அமர்ந்து மது குடித்தவர்கள் சத்தமாக பேசினர்.மெதுவாக பேசும்படி சுரேஷ் கூறியதால் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணியளவில் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சுரேஷை, அவரது மனைவி கண்முன்பே மூன்று பேர் குத்தி கொலை செய்தனர்.சுரேஷ் வசிக்கும் வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கெஞ்சயனதொட்டி கிராமத்தின் காந்தி குமார் எனும் சைக்கோ காந்தி, 27, கோபால், 40, கிரண்குமார், 28 ஆகியோரை, பன்னர்கட்டா போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, வினோத் என்பவரை போலீசார் தேடுகின்றனர்.
31-Mar-2025