மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதிய விபத்தில் பெயின்டர் பலி
25-Jun-2026
ஹாவேரி: சில்லரை விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், வியாபாரியை கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். ஹாவேரி மாவட்டம், ரட்டிஹள்ளியில் சிவாஜிராவ் பைரோஜ், 55, என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு இவரும், இவரது மகன் பரத்தும் கடையில் இருந்த போது, வாசிம் உட்பட நான்கு இளைஞர்கள் கடைக்கு வந்தனர். 100 ரூபாய் கொடுத்து, ஐந்து முட்டை வாங்கினர். பரத், ஐந்து முட்டைகளுக்கான பணத்தை எடுத்து கொண்டு, சில்லரையை கொடுத்தார். அப்போது வாசிம், 500 ரூபாய் கொடுத்ததாக தகராறு செய்தார். இதனால் அவருக்கும், கடை உரிமையாளருக்கும் வாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை சென்றது. இதை கவனித்த சிவாஜி ராவ் பைரோஜி, சண்டையை விலக்கி விட முயற்சித்தார். அப்போது, வாசிமும், மற்ற மூவரும் சிவாஜி ராவ் பைரோஜை தாக்கி, கீழே தள்ளி மிதித்தனர். பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, இவரது ம கன் அளித்த புகாரின்படி, அங்கு வந்த ரட்டிஹள்ளி போலீசார், வாசிம் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடுகின் றனர்.
25-Jun-2026