உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறையிலிருந்து 3 ஆயுள் கைதிகள் தப்பி ஓட்டம்

 சிறையிலிருந்து 3 ஆயுள் கைதிகள் தப்பி ஓட்டம்

கலபுரகி: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூன்று கைதிகள், சிறையில் இருந்து தப்பினர். கலபுரகி நகரின் புறப்பகுதியில் உள்ள மத்திய சிறையில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மஸ்தான், சந்தோஷ், சாகர் ஆகியோர், போலீஸ் பாதுகாப்பை மீறி, சுவர் ஏறி குதித்து தப்பினர். நேற்று காலையில் போ லீசாருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. பர்ஹதாபாத் போலீசார், அவர்களை கண்டுபிடிக்கும் பணியில், ஈடுபட்டு உள்ளனர். வழக்கமாக அனைத்து கைதிகளும் இரவில் சிறையில் அடைக்கப்படுவர். இதை போலீசாரும் உறுதி செய்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி தப்பி சென்றனர். போலீசாரே அவர்களுக்கு உதவினரா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை