உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கார் மீது பஸ் மோதல் 3 பேர் பரிதாப பலி

கார் மீது பஸ் மோதல் 3 பேர் பரிதாப பலி

பெலகாவி : கலபுரகி மாவட்டம், அப்ஜல்புராவில் வசிக்கும் சிலர், மஹாராஷ்டிராவின், கொல்லாபுரா மஹாலட்சுமி கோவிலுக்கு சென்றிருந்தனர். தரிசனம் முடிந்து நேற்று மதியம் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், முரகுன்டி புறநகரில் செல்லும் போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. காரில் இருந்த கிரிஷ் பள்ளொரகி, ராகுல் மாலேஷி, சங்கு அமரகொன்டா ஆகியோர் உயிரிழந்தனர். ராதிகா மாலேஷி என்பவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த அதானி போலீசார், காரில் இறந்து கிடந்த மூவரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த பெண்ணை, மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, வழக்கு பதிவாகியுள்ளது.

இருவர் பலி

மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், ஹொசகாவி கிராமத்தின் அருகில், நேற்று மாலை வேகமாக சென்ற பைக், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் விழுந்தது. இதில் பயணித்த பரத், 19, ராமண்ணா, 70, உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !