உள்ளூர் செய்திகள்

3,000 ட்ரோன்கள் ஷோ

மை சூரு தசராவை ஒட்டி அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் ட்ரோன் ஷோ, மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்தம் கிரவுண்டில் நடக்கும். இதை சாமுண்டீஸ்வரி மின்சார விநியோக கழகம் நடத்துகிறது. இதற்கான ஒத்திகை நேற்று நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான ட்ரோன்கள் பங்கேற்றன. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ட்ரோன் ஷோவில் 1,500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், வானில் 15க்கும் மேற்பட்ட ஒளி வடிவங்கள், வடிவமைப்புகளில் காட்சி அளித்தன. இது பெரும்பாலான சுற்றுலாப் பயணியரை கவர்ந்திழுத்தது. இந்த ஆண்டு ட்ரோன் ஷோவை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாமுண்டீஸ்வரி மின்சார கழக நிர்வாக இயக்குநர் முனிகோபால் ராஜு கூறியதாவது: இந்த ஆண்டு நடக்கும் ட்ரோன் ஷோவில், 3,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். இது கடந்த ஆண்டு உபயோகப்படுத்தப்பட்ட ட்ரோன்களின் அளவை விட அதிகம். இந்நிகழ்ச்சியை உரிய அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம் எடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை