உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  15 ஆண்டுக்கு மேல் ஓடிய 3,212 அரசு பஸ்கள் நிறுத்தம்

 15 ஆண்டுக்கு மேல் ஓடிய 3,212 அரசு பஸ்கள் நிறுத்தம்

பெலகாவி: ''கடந்த 2023 ல் இருந்து தற்போது வரை, கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களின் 3,212 பஸ்கள் 15 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்ததால், அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார். மேல்சபையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜ் எழுப்பிய கேள்விக்கு, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி அளித்த பதில்: மாநிலத்தின் அனைத்து அரசு துறைகள், மாநகராட்சிகள், வாரியங்கள், நகராட்சிகள், அரசு சார்ந்த துணை நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடி இருந்தால், அந்த வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நிறுத்த செப்டம்பர் 12 ம் தேதி அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 4 ம் தேதி அன்று, வாகன இணையதளத்தில் பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன 18,552 அரசு வாகனங்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 1,493 வாகனங்கள் ஸ்கிராப் செய்ய அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மீதும் 17,059 வாகனங்கள் ஸ்கிராப் செய்யும் பணி நிலுவையில் உள்ளது. கடந்த 2023 ல் இருந்து தற்போது வரை, கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களின் 3,212 பஸ்கள் 15 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்ததால், அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ