உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.சி., - எஸ்.டி., பிரச்னைகளை விசாரிக்க கர்நாடகாவில் 33 தனி போலீஸ் நிலையங்கள்

எஸ்.சி., - எஸ்.டி., பிரச்னைகளை விசாரிக்க கர்நாடகாவில் 33 தனி போலீஸ் நிலையங்கள்

பெங்களூரு: எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் மீது நடக்கும் தாக்குதலை தடுக்கவும், விசாரிக்கவும் பெங்களூரில் இரண்டு உட்பட 32 மாவட்டங்களில் 33 டி.சி.ஆர்.இ., எனும் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகம் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்தார்.பின் அவர் பேசியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினர் மீது நடக்கும் தாக்குதலை தடுக்கவும், விசாரிக்கவும் பெங்களூரில் இரண்டு உட்பட 32 மாவட்டங்களில் 33 டி.சி.ஆர்.இ., எனும் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகம் போலீஸ் நிலையம் இன்று (நேற்று) முதல் திறக்கப்பட்டு உள்ளன.கர்நாடகாவில் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைவு. இது தொடர்பாக விசாரணை நடத்த, டி.சி.ஆர்.இ., போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.பட்ஜெட் தொகை அதிகரித்ததால், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கான தொகையும் அதிகரித்து உள்ளது. முந்தைய பா.ஜ., அரசு, இவர்களுக்கான தொகையை குறைத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 42,018 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். ஆனால் 8,300 கோடி ரூபாய் மோசடி செய்த பா.ஜ.,வினர், எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.அம்பேத்கரின் கனவை நனவாக்க, வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தி, ஏழை குடும்பத்தினரின் பொருளாதாரத்தை அதிகரித்து உள்ளோம். ஆந்திரா மாநிலம் போன்று, கர்நாடகாவிலும் பிரமாண்ட அம்பேத்கர் சிலை அமைக்கப்படும்.படித்தவர்களில் பெரும்பாலும் ஜாதி மோகம் கொண்டவர்களாக இருப்பது சரியல்ல. நாடு முழுதும் நுாற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கல்வி பெற வாய்ப்பு அளித்தவர் அம்பேத்கர்.முஸ்லிம்களுக்கு கல்வி மறுக்கப்பட கூடாது; வாய்ப்பு மறுக்கப்பட கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அனைத்து ஜாதி, மதங்களை சேர்ந்த ஏழைகளுக்கு வாய்ப்பு அளிக்கிறோம்.முஸ்லிம்களை கவர்ந்திழுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பொய் பிரசாரம் செய்வதாக, பா.ஜ.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். அம்பேத்கர் வகுத்த பாதையை எங்கள் அரசு பின்பற்றுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை