4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
பெங்களூரு: கலபுரகி கலெக்டர் உட்பட 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலபுரகி மாவட்ட கலெக்டர் பவுசியா தரணம், ஊரக குடிநீர் துறை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார். நிதி துறை இணை செயலர் முகமது இக்ரமுல்லா ஷெரீப், கலபுரகி கலெக்டராக இனி பணியாற்றுவார். நிதி துறை துணை செயலராக பணியாற்றிய கோபால கிருஷ்ணா, நிதி துறையின் பட்ஜெட் மற்றும் வருவாய் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஹாவேரி சி.இ.ஓ., ருச்சி பிண்டல், நிதி துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.